Sunday, 2 December 2012

                                                                          விவசாயம்
    காணுகின்ற     இடங்களெல்லாம்       வயல்வெளிகள்
    தேனெடுக்க    வண்டு     பேசும் புது                மொழிகள்
    கதிர் முற்றி  தலை சாய்க்கும்     நெல்  மணிகள் .
    பரந்த வயல்வெளிஎல்லாம்    புது         அணிகள் .
    வயதுக்கு வந்த வெக்கம் தலை குனிந்து  நிமிராமல்
    வாரி களம் குவித்திடுவோம்  ஒன்று கூட  உதிராமல் .
    தென்றலோடு  சோலைபூக்கள்  சேர்ந்து  ஆடும்
    வயலை சேர     ஓடை நீறும் பாய்ந்து        ஓடும்.
    வீட்டை சுற்றி மரங்களாய்  இறைவன் தந்த   வரங்களாய்
    நீர் குடித்து நிழல் கொடுக்கும் .
    கொடும் வெயிலை  தினம்  தடுக்கும்.
    நீண்ட ஆயுள் தான் கொண்ட நோயில்லா வாழ்வு  அன்று.
    மாத்திரையில் நித்திரை கொள்ளுகின்ற நாள்          இன்று .
   பயிர் விளையும் நிலங்கள் எல்லாம்       பலமாடி      கட்டிடங்கள் .
   உயிர் வளர்க்கும்  உணவு இன்றி  பசுமை  இல்லா   வெற்றிடங்கள்
   எழில் கொஞ்சும் சோலையெல்லாம் எங்கே என கேட்கும்
                  எதிர்கால  தலைமுறைகள் .
    பொய்த்துப்போன கார் முகிலால்  நீருக்கு போராடும்
                         நம்    நிலைகள்
     மூச்சுக்காற்றையும்  முதுகில் சுமக்கும்  நான் அது வந்து விடும் .
  நோயின் மடியிலே நம்மை போட்டு     மரண பரிசு    தந்துவிடும்
  வியர்வை துளிகள் பூமியில்  சிந்திட  செய்வோம்  விவசாயம் .
   இன்று உயர்வை நினைத்து தொழிலை மாற்றிட
                                                            நெஞ்சிலை  பெரும்   காயம் ...
மனிதா ..மாறிட வேண்டும்  விவசாயம் வேண்டும்  மீண்டும் ....

Saturday, 1 December 2012

கடைக்கண்  திறக்காத காதல்                                                                                                                                என்னை  பார்க்காத  உன்னை  மறக்க ,
                          பந்தைய குதிரையாய்  தான் ஓடினேன் ..
                          மீண்டும் உன் முன்னே கடிகாரமுள்ளாய்  நான் ..
                          இதயத்து  அறையில்  உன் முகம் வரைந்தேன் .
                          உனக்கு தெரியாமல்  உன் நிழலாய்  தொடர்ந்தேன் .
                          உன் மௌனக்கொலையால்  நான்  தினம்  இறந்தேன் .
                         ஏதோ ஒன்று              எனைவிட்டு                       பறக்க ,
                           இருதயத்தில்  யாரோ  சம்மட்டியால்            அடிக்க ,
                        உனைக்கடக்கும் போது மட்டும் உயிர் கொஞ்சம்
                                                                                                                   துடிக்க ,
                        கற்பனையில் உன்னுடன் கை பிடித்து            நடக்க,
                        மௌன  ஊர்வலம்     உள்ளுக்குள்                    தொடங்க,
                        மரண ஒத்திகை              உயிர்     செய்து           பார்க்க
                        நினைவாய் வேதனை விழி நீராய்                   பணிக்க ,
                        காற்று மட்டும்  மெதுவாய் என் கண்ணீரை  துடைக்க,
                       எந்த உளி  கொண்டு          உன் இதயத்தை        உடைக்க ,
                      என் படுக்கை எல்லாம்   வெறும்            முள்ளடி ,   
                       உன் செவ்விதழ்      திறந்து                     சொல்லடி ,
                                                   என் உயிரை        மீட்டுக்கொள்ளடி ,
                       உயிர் கொண்டு  உலவும் நீ மண [ ன] ம்    இல்லா             மனம்.
                      உன் கடைக்கண்  பார்வைக்காக  நடைபிணமாய் நான்   தினம் ....