Tuesday 3 December 2013

                                                               காதல்


              காற்றாட்டு  வெள்ளமாய்  நான்  கரைபுரண்டு    ஓட ..
              எங்கிருந்து  வந்தாயடி          எனக்கு                   போட..
              மெல்ல  கொல்லும்  நஞ்சினை  உன் உன்  விழி  இரண்டில்
                                                                                            நிறைத்து...
              கடலுக்குள்  உப்பு போல  எனை  உன்னில்
                                                                                            கரைத்து ...
            என்ன செய்ய போகிறாய் எனை நீயும் நீயும்    அடுத்து ..
             உயிருக்குள்  உடுத்திக்கொள்  மெல்ல எனை   எடுத்து ...
             காற்று    போல    நான் இ்ருக்க,  எனை
             காணாமல்  நீ                தவிக்க ,
             பூட்டி   தான்   வைத்து   இருந்தேன் ,புகுந்தது  எப்படி நீ ?
             இரவு பொழுதை எல்லாம் பகலாக்கி  நீ   பேச ,
             உன் மடி மீது நான் அமர்ந்து   உம்  சொல்ல  பேராச.
             உன் வழியே  என் உயிரை     சேமிக்கிறேன் .
             வா ..எனக்குள்ளே  உன்னை   காமிக்கிறேன் .....
       
     

Sunday 2 December 2012

                                                                          விவசாயம்
    காணுகின்ற     இடங்களெல்லாம்       வயல்வெளிகள்
    தேனெடுக்க    வண்டு     பேசும் புது                மொழிகள்
    கதிர் முற்றி  தலை சாய்க்கும்     நெல்  மணிகள் .
    பரந்த வயல்வெளிஎல்லாம்    புது         அணிகள் .
    வயதுக்கு வந்த வெக்கம் தலை குனிந்து  நிமிராமல்
    வாரி களம் குவித்திடுவோம்  ஒன்று கூட  உதிராமல் .
    தென்றலோடு  சோலைபூக்கள்  சேர்ந்து  ஆடும்
    வயலை சேர     ஓடை நீறும் பாய்ந்து        ஓடும்.
    வீட்டை சுற்றி மரங்களாய்  இறைவன் தந்த   வரங்களாய்
    நீர் குடித்து நிழல் கொடுக்கும் .
    கொடும் வெயிலை  தினம்  தடுக்கும்.
    நீண்ட ஆயுள் தான் கொண்ட நோயில்லா வாழ்வு  அன்று.
    மாத்திரையில் நித்திரை கொள்ளுகின்ற நாள்          இன்று .
   பயிர் விளையும் நிலங்கள் எல்லாம்       பலமாடி      கட்டிடங்கள் .
   உயிர் வளர்க்கும்  உணவு இன்றி  பசுமை  இல்லா   வெற்றிடங்கள்
   எழில் கொஞ்சும் சோலையெல்லாம் எங்கே என கேட்கும்
                  எதிர்கால  தலைமுறைகள் .
    பொய்த்துப்போன கார் முகிலால்  நீருக்கு போராடும்
                         நம்    நிலைகள்
     மூச்சுக்காற்றையும்  முதுகில் சுமக்கும்  நான் அது வந்து விடும் .
  நோயின் மடியிலே நம்மை போட்டு     மரண பரிசு    தந்துவிடும்
  வியர்வை துளிகள் பூமியில்  சிந்திட  செய்வோம்  விவசாயம் .
   இன்று உயர்வை நினைத்து தொழிலை மாற்றிட
                                                            நெஞ்சிலை  பெரும்   காயம் ...
மனிதா ..மாறிட வேண்டும்  விவசாயம் வேண்டும்  மீண்டும் ....

Saturday 1 December 2012

கடைக்கண்  திறக்காத காதல்                                                                                                                                என்னை  பார்க்காத  உன்னை  மறக்க ,
                          பந்தைய குதிரையாய்  தான் ஓடினேன் ..
                          மீண்டும் உன் முன்னே கடிகாரமுள்ளாய்  நான் ..
                          இதயத்து  அறையில்  உன் முகம் வரைந்தேன் .
                          உனக்கு தெரியாமல்  உன் நிழலாய்  தொடர்ந்தேன் .
                          உன் மௌனக்கொலையால்  நான்  தினம்  இறந்தேன் .
                         ஏதோ ஒன்று              எனைவிட்டு                       பறக்க ,
                           இருதயத்தில்  யாரோ  சம்மட்டியால்            அடிக்க ,
                        உனைக்கடக்கும் போது மட்டும் உயிர் கொஞ்சம்
                                                                                                                   துடிக்க ,
                        கற்பனையில் உன்னுடன் கை பிடித்து            நடக்க,
                        மௌன  ஊர்வலம்     உள்ளுக்குள்                    தொடங்க,
                        மரண ஒத்திகை              உயிர்     செய்து           பார்க்க
                        நினைவாய் வேதனை விழி நீராய்                   பணிக்க ,
                        காற்று மட்டும்  மெதுவாய் என் கண்ணீரை  துடைக்க,
                       எந்த உளி  கொண்டு          உன் இதயத்தை        உடைக்க ,
                      என் படுக்கை எல்லாம்   வெறும்            முள்ளடி ,   
                       உன் செவ்விதழ்      திறந்து                     சொல்லடி ,
                                                   என் உயிரை        மீட்டுக்கொள்ளடி ,
                       உயிர் கொண்டு  உலவும் நீ மண [ ன] ம்    இல்லா             மனம்.
                      உன் கடைக்கண்  பார்வைக்காக  நடைபிணமாய் நான்   தினம் ....

Saturday 28 April 2012





பாவேந்தர் பாரதிதாசனார் புகழ் வாழ்க!
==================================
(பிறந்தநாள்: 1892,ஏப்ரல் 29. புதன் இரவு 10.15)

தாய்மொழித் தொண்டே தவமெனத் தாங்கி
தாய்மொழிப் பண்பின் தனிமையைக் காக்கும்
வாய்மையே தன்னுடை வாழ்வின் உயிர்ப்பாய்
முதுமையிற் புகுந்துள முரண்களை மாற்றி
புதுமையிற் பாடும் புரட்சிக் கவிஞன்!

(பாடல்:நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை) 

Monday 26 March 2012












மின்வெட்டு!
=========

யாரைக்கண்டு வெட்க்ம்
ஓயாமல் ஓடி ஒளிகின்றாள்
'மின்சார'க்கன்னி?


- கு.தமயந்தி




Thursday 26 January 2012

தமிழா.. உனக்கொரு தகவல்



        தன்னிடம்     வந்தோரை 

        தாங்கிடும் தமிழ் மனமே..

        உன்னை கண்ணீரில்  தள்ளுதே,

        இன்று    பல      இனமே..

       ஈழத்தில்   நம் இனம்,

       வேரற்று   சாகிறது.

       வேதனை  பாரத்தில்

       உயிர்வற்றி   வேகிறது.

       அண்டை மாநிலத்தோடு  ,

       சண்டை தான் மூள்கிறது.

       மண்டை உடைபட்டு

      வன்முறை  நீள்கிறது.

      நீருக்கு போரிடும் நிலைமை

      தான் இன்று.

       பாருக்குள் ஒன்றுபடும் இன்ப

       நாள் என்று?

       செல்லும் இடமெல்லாம்,

      தமிழனுக்கு தலைகுனிவு..

      வெல்லும்  நம் இனம் வேண்டும்

       இனி, பெரும் துணிவு.

       இழிநிலை தாங்கும் தமிழனே,

        இனியும்              நீ              உறங்காதே.

       நீ வீரத்தின் சாரம் என்பதை மறக்காதே.

       பக்கத்து மாநிலத்தில் பகைமை

      கொள்ளும் வேதனை.

     திக்கத்து நிற்கிறோம் விடியாத

      பெரும்       சோதனை.

    உறவு  தேசமெல்லாம்

    உதறுகின்ற மோசம்.

    இரவு போலவே இன்னும் 

    விடியாத நம் தேசம்.

    வீரம் விளைந்தது  நம்  
  
     மண்ணில் தான் -  இன்று

     ஈரம் கசிவதும் நம்

     கண்ணில் தான் .

    ஓடி ஒளிந்திடும் தன்மானத்தமிழனே
,
    கூடி இணைந்து   எதிர்த்திடு  கயவனை.

    பொறுமை  காத்தது போதும்   நண்பா.

    போரிட நீ மாறு இன்னொரு அம்பா..

    தமிழனை தாக்கும்

    மடையனை எல்லாம்,

    படையென திரண்டு எதிர்த்திடுவோம்.

    குடையென மக்களை காக்க  வரும்

    தடைகளையெல்லாம் உடைத்திடுவோம்.

    உறங்கியது      போதும்      எழுந்திரு.

   நாட்டைக்காக்க  புயலாய்  புறப்படு......
  

 
                                                                         
    
     
       
      

சிந்திவிடு

      

                   சிரிப்பை         சிந்திவிடு               -     அது

                           அழகின்    ரகசியம்.

                  வியர்வை          சிந்திவிடு           -    அது

                           உழைப்பின்  உன்னதம்.

                    அன்பை         சிந்திவிடு            -        அது

                            ஆன்மாவின்   அதிசயம்.

                    நல்வார்த்தைகளை சிந்திவிடு - அது

                            நட்பின்     துவக்கம்......