கடைக்கண் திறக்காத காதல் என்னை பார்க்காத உன்னை மறக்க ,
பந்தைய குதிரையாய் தான் ஓடினேன் ..
மீண்டும் உன் முன்னே கடிகாரமுள்ளாய் நான் ..
இதயத்து அறையில் உன் முகம் வரைந்தேன் .
உனக்கு தெரியாமல் உன் நிழலாய் தொடர்ந்தேன் .
உன் மௌனக்கொலையால் நான் தினம் இறந்தேன் .
ஏதோ ஒன்று எனைவிட்டு பறக்க ,
இருதயத்தில் யாரோ சம்மட்டியால் அடிக்க ,
உனைக்கடக்கும் போது மட்டும் உயிர் கொஞ்சம்
துடிக்க ,
கற்பனையில் உன்னுடன் கை பிடித்து நடக்க,
மௌன ஊர்வலம் உள்ளுக்குள் தொடங்க,
மரண ஒத்திகை உயிர் செய்து பார்க்க
நினைவாய் வேதனை விழி நீராய் பணிக்க ,
காற்று மட்டும் மெதுவாய் என் கண்ணீரை துடைக்க,
எந்த உளி கொண்டு உன் இதயத்தை உடைக்க ,
என் படுக்கை எல்லாம் வெறும் முள்ளடி ,
உன் செவ்விதழ் திறந்து சொல்லடி ,
என் உயிரை மீட்டுக்கொள்ளடி ,
உயிர் கொண்டு உலவும் நீ மண [ ன] ம் இல்லா மனம்.
உன் கடைக்கண் பார்வைக்காக நடைபிணமாய் நான் தினம் ....

No comments:
Post a Comment