கருவறையில் என்னை வைத்து காத்திட்ட அன்னை ..
உயிர்கொண்ட உடல்போல காக்கிறாளே என்னை..
கத்தும்கடல் முத்தைப்போல
என்நிழல்வாழ்வின் நிஜமாக நீ வந்தாய்...
முத்தமிட்டு கன்னத்திலே என்முகவரியை நீ தந்தாய்...
பாராட்டி,சீராட்டி பார்த்து பார்த்து நீராட்டி
பூச்சூட்டி பொட்டு வைத்து
வான்நிலவை நீ காட்டி கதைசொல்லி நீ வளர்த்தாய்...
என்பேர்சொல்லி பள்ளியிலே கைதட்டும்சேதியெல்லாம் உன்செவியினிலே சேர்ந்தபின்னே
பெற்ற வயிறுகுளிர அன்று தானே நீ சிரித்தாய்.
சுள்ளிகளை பொறுக்கி வந்து சுடசுடவே சோறு ஆக்கி
பள்ளிவிட்டு நான் வந்தால் பாசம்பொங்க ஊட்டிடுவாய்
சோர்வுற்று நான் இருந்தால் கனிவான உன் வாய்விருந்தால்
மடிசாய்ந்து தலைகோதி உற்சாகமூட்டிடுவாய்
நான்சிந்திய வார்த்தையெல்லாம் சிதறாமல் கோர்த்துவைத்து
அவ்வப்போது சொல்லி சொல்லி உன்ஆயுளை கூட்டிடுவாய்
உன்னை அம்மா என்று அழைத்துதான் என் அழகுதமிழ் பிறந்தது
உன்கரம்பற்றி நடக்கையிலே என்கவலை எல்லாம் பறந்தது
எத்தனையோ உறவுகளில் உன்உறவு விருட்சமாய்
என் வாழ்வெல்லாம் உன்னாலே ஆனது பெரும் வெளிச்சமாய்........

ReplyDeleteபெற்ற வயிறுகுளிர அன்று தானே நீ சிரித்தாய்.
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்..
உங்கள் கவிதைகள் இனி உயரம் தொட்டு நிறைய சிரிப்பலைகளை உண்டாக்கட்டும் உங்கள் வீட்டில்.
அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துகள்
உன்னை அம்மா என்று அழைத்துதான் என் அழகுதமிழ் பிறந்தது.....
ReplyDeleteஉன்கரம்பற்றி நடக்கையிலே என்கவலை எல்லாம் பறந்தது!
-------------------------------------
ஆகா! ஒரு தமிழ்ப்பற்றுள்ள கவிதாயினிக்குள்ள உள்ளுணர்வை கவிதையிலேயெ வெளிப்படுத்தியுள்ளீர்கள்! பாராட்டுக்கள்!
- கிரிஜா மணாளன்