Thursday, 26 January 2012

தமிழா.. உனக்கொரு தகவல்



        தன்னிடம்     வந்தோரை 

        தாங்கிடும் தமிழ் மனமே..

        உன்னை கண்ணீரில்  தள்ளுதே,

        இன்று    பல      இனமே..

       ஈழத்தில்   நம் இனம்,

       வேரற்று   சாகிறது.

       வேதனை  பாரத்தில்

       உயிர்வற்றி   வேகிறது.

       அண்டை மாநிலத்தோடு  ,

       சண்டை தான் மூள்கிறது.

       மண்டை உடைபட்டு

      வன்முறை  நீள்கிறது.

      நீருக்கு போரிடும் நிலைமை

      தான் இன்று.

       பாருக்குள் ஒன்றுபடும் இன்ப

       நாள் என்று?

       செல்லும் இடமெல்லாம்,

      தமிழனுக்கு தலைகுனிவு..

      வெல்லும்  நம் இனம் வேண்டும்

       இனி, பெரும் துணிவு.

       இழிநிலை தாங்கும் தமிழனே,

        இனியும்              நீ              உறங்காதே.

       நீ வீரத்தின் சாரம் என்பதை மறக்காதே.

       பக்கத்து மாநிலத்தில் பகைமை

      கொள்ளும் வேதனை.

     திக்கத்து நிற்கிறோம் விடியாத

      பெரும்       சோதனை.

    உறவு  தேசமெல்லாம்

    உதறுகின்ற மோசம்.

    இரவு போலவே இன்னும் 

    விடியாத நம் தேசம்.

    வீரம் விளைந்தது  நம்  
  
     மண்ணில் தான் -  இன்று

     ஈரம் கசிவதும் நம்

     கண்ணில் தான் .

    ஓடி ஒளிந்திடும் தன்மானத்தமிழனே
,
    கூடி இணைந்து   எதிர்த்திடு  கயவனை.

    பொறுமை  காத்தது போதும்   நண்பா.

    போரிட நீ மாறு இன்னொரு அம்பா..

    தமிழனை தாக்கும்

    மடையனை எல்லாம்,

    படையென திரண்டு எதிர்த்திடுவோம்.

    குடையென மக்களை காக்க  வரும்

    தடைகளையெல்லாம் உடைத்திடுவோம்.

    உறங்கியது      போதும்      எழுந்திரு.

   நாட்டைக்காக்க  புயலாய்  புறப்படு......
  

 
                                                                         
    
     
       
      

2 comments:

  1. உங்கள் இணையத்தை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்

    http://www.tamil10.com/

    ஒட்டுப்பட்டை பெற



    நன்றி

    ReplyDelete
  2. படிக்க படிக்க சிலிர்க்கிறது தோழி !

    ReplyDelete