Thursday, 26 January 2012

தமிழா.. உனக்கொரு தகவல்



        தன்னிடம்     வந்தோரை 

        தாங்கிடும் தமிழ் மனமே..

        உன்னை கண்ணீரில்  தள்ளுதே,

        இன்று    பல      இனமே..

       ஈழத்தில்   நம் இனம்,

       வேரற்று   சாகிறது.

       வேதனை  பாரத்தில்

       உயிர்வற்றி   வேகிறது.

       அண்டை மாநிலத்தோடு  ,

       சண்டை தான் மூள்கிறது.

       மண்டை உடைபட்டு

      வன்முறை  நீள்கிறது.

      நீருக்கு போரிடும் நிலைமை

      தான் இன்று.

       பாருக்குள் ஒன்றுபடும் இன்ப

       நாள் என்று?

       செல்லும் இடமெல்லாம்,

      தமிழனுக்கு தலைகுனிவு..

      வெல்லும்  நம் இனம் வேண்டும்

       இனி, பெரும் துணிவு.

       இழிநிலை தாங்கும் தமிழனே,

        இனியும்              நீ              உறங்காதே.

       நீ வீரத்தின் சாரம் என்பதை மறக்காதே.

       பக்கத்து மாநிலத்தில் பகைமை

      கொள்ளும் வேதனை.

     திக்கத்து நிற்கிறோம் விடியாத

      பெரும்       சோதனை.

    உறவு  தேசமெல்லாம்

    உதறுகின்ற மோசம்.

    இரவு போலவே இன்னும் 

    விடியாத நம் தேசம்.

    வீரம் விளைந்தது  நம்  
  
     மண்ணில் தான் -  இன்று

     ஈரம் கசிவதும் நம்

     கண்ணில் தான் .

    ஓடி ஒளிந்திடும் தன்மானத்தமிழனே
,
    கூடி இணைந்து   எதிர்த்திடு  கயவனை.

    பொறுமை  காத்தது போதும்   நண்பா.

    போரிட நீ மாறு இன்னொரு அம்பா..

    தமிழனை தாக்கும்

    மடையனை எல்லாம்,

    படையென திரண்டு எதிர்த்திடுவோம்.

    குடையென மக்களை காக்க  வரும்

    தடைகளையெல்லாம் உடைத்திடுவோம்.

    உறங்கியது      போதும்      எழுந்திரு.

   நாட்டைக்காக்க  புயலாய்  புறப்படு......
  

 
                                                                         
    
     
       
      

சிந்திவிடு

      

                   சிரிப்பை         சிந்திவிடு               -     அது

                           அழகின்    ரகசியம்.

                  வியர்வை          சிந்திவிடு           -    அது

                           உழைப்பின்  உன்னதம்.

                    அன்பை         சிந்திவிடு            -        அது

                            ஆன்மாவின்   அதிசயம்.

                    நல்வார்த்தைகளை சிந்திவிடு - அது

                            நட்பின்     துவக்கம்...... 

Thursday, 19 January 2012

காதல்




இன்பசுகங்களையும்துன்பசுமைகளையும்
அடக்கி வைத்திருக்கும்  ஆழிப்பேரலை.

வெள்ளமென கனவை சுமந்த இரு உள்ளங்களை
கட்டிப்போடும்     அதிசய மாயவலை.
உணர்வுகளை மாற்றி,உலகத்தின் அழகைகூட்டிவிடும்.
உள்ளம் அவள் நினைவால் செல்லரித்து காட்டுத்தீயாய் சுடும்.
சுவர் எழுப்பி தடுத்தாலும் சுக்குணூறாய் நொறுங்கிவிடும்.
பார்வைபடும் இடமெல்லாம் அவள் வதனமுகம் மட்டும் வந்துபோகும்.
அவளை   பார்க்காத   நேரத்தில்  உடல்தீயாய்   வெந்து    போகும்.
காற்றும் நுழையாத இடத்தில் நொடிக்குள் படரும் கொடி அவள்.
வாட்டும்   இரவுப்பொழுதில்   எனைத்தாங்கும்   மடி    அவள்.
அவள் அருகில் இருந்தால் பேச்சுவராது.
அவள் தொலைவில் மறைந்தால் மூச்சே இராது.
கடலில் நடக்கவும் காற்றில் மிதக்கவும் கற்றுத்தரும்.
புதுஒரு உலகத்தில் புகுந்தது போன்ற உணர்வு வரும்.
அவள் இதழ் உதிக்கும் வார்த்தையெல்லாம்,ஒலியும்,ஒளியுமாய்,
இதயக்கணினியில் இருக்கும்.
அவ்வப்போது உயிர்த்தெழுந்து நெருஞ்சியாய் உயிரைத்தைக்கும்.
யாரிடம் பேசினாலும் மனம்மட்டும் அவளிடம் புள்ளியில் சிக்கிய கோலமாய்........
நேரத்தை  கடந்து  அவளிடம்  பேசிட  அலைபேசி  எங்களுக்கு  பாலமாய்....
அடிக்கடி    தலைவாரி   அழகுபார்க்கிறேன்.
நான் கண்ணாடி முன்னாடி நின்று சிரிக்கிறன்.
கதிரவன் வந்தும் கண்விழிக்காத நான் வைகரையில் எழுந்து அவள் வாசலில் நிற்கிறேன்.
சுழலும் மின் விசிறியாய் மனம் அவளை சுற்றியே சுழலுது....
பூசனிகொடிபோல் அவள் வாசலை தேடியே படருது....
கத்தும் கடல்போல் உள்ளம் அடிக்குது.
சித்தம் கெட்டு சிலநேரம்  வெடிக்குது.
காதல் அரும்பு இதயத்தில் பூத்துவிட்டால்,உறக்கம் நம்மை உதறிவிடும்.
தனிமையில் இதயம் கதறியழும்.
மௌனம் மட்டும் மணிக்கனக்காய் பேசும்.
அவள் சுவாசமே உயிர் காற்றாய்   வீசும்.
தானே புயலாய் புரட்டிப்போடும்,அவள் காதல் தானே!
ஏனோ தெரியவில்லை அவளாகிப்போனேன்  நானே!                             
                                                                    

Saturday, 7 January 2012

ஹைகூ




பொய்த்துப்போன பருவமழையால்
விவசாயி வடித்த  கண்ணீர்
கடல்.

யாரிடம் காதல்  தோல்வி
ஓயாமல் அழுகிறது
மழை.

தடாகத்தின்  அழுக்கை  தின்று  
சுத்தப்படுத்தும்  மீன்,பொதுநலவாதி.
தன்னை  மட்டும்  உயர்த்திக்கொள்ளும்
அரசியல்வாதி, சுயநலவாதி............... 
    
மழைமீது கொண்ட காதலால்
பூமி பிரசவித்தது,
புல்வெளி குழந்தை.

கள்வன் போல் வைகறையில் வந்து,
கரைதாண்டி   ஊருக்குள்    புகுந்து,
உயிர்களை  குடித்த  கடல்  பருந்து.
..... சுனாமி.


தானே புயல்

                                    

   தானே புயல் தானே என்று தாழிட்டு உள்ளிருந்தேன்.
   ஆற்பரித்து  அடித்த புயல்  ஊரை  மெல்ல  சிதைத்தது.
   வெளிச்சமில்லா நடு இரவில், அச்சத்தில்  இதயம்  துடித்தது.
   இரக்கமில்லா  புயல் அரக்கனால் உறக்கமில்லை  கண்களுக்கு.
   உனை  தடுக்க  வழி  இல்லைஅன்றிரவு       எங்களுக்கு.
   சுழற்றி    அடித்து    மிரட்டினாய்.
   கிடைத்த பொருளை  சுருட்டினாய்.
   வெளியில் வந்தால்  விரட்டினாய்.
   எங்கள் விடியலை நீ  புரட்டினாய்.
   புத்தாண்டை வரவேற்க புன்னகைத்து காத்திருக்க,எங்கள்
   சொத்தை   எல்லாம்   சீர்குலைக்க   எங்கிருந்து  நீ   வந்தாய்?
   சித்தாடை கட்டிக்கொண்டு ஆடிபாடும் வேளையிலே,
   சிந்திடும் கண்ணீரோடு சிதறிய உடைமைகளை
   தேடும் நிலை நீ   தந்தாய்.
   துயில்கொள்ளும்  வேலையிலே புயலாக நீ வந்தாய்.
   எழிலான ஊரையெல்லாம் தலைகீழாய் மாற்றி சென்றாய்.                             
   வறுமையில் வாடிய உறவுகளை  நீ கொன்றாய்.
   கருமையாய்  வாழ்வை மாற்றி
   கவலைகளை  நீ   தந்தாய்.
   நீ  ஆடியது பல மணிநேரம்,ஆண்டுகள்  ஆனாலும்
   இறக்க முடியாத  பாரம்.
   இழப்புகளை   காண    இரவு    மெல்ல   விடிந்தது.
   வரமான  மரங்கள்  எல்லாம்  மண்ணிலே  ஒடிந்தது
   வயல்,வீடு,தோட்டமெல்லாம் வசந்தத்தை  இழந்தது.
   சொல்லாத சோகமெல்லாம் முகத்தினில்   தெரிந்தது.      
   வரும்காலம்    ஏசும்படி    உன் செயல்   அமைந்தது.
   உயிர்களையும், உடைமைகளையும் இழந்துவிட்டு,
   வீதியிலே நிற்கின்றோம் வாழ்வை கேட்டு.
   இயற்கையே   எங்கள்   மீது   இரக்கம்   காட்டு.
   வேதனையை    வேரோடு  தூர          ஓட்டு.
   கோபத்தை  காட்டியதால்  மாறியது  எங்கள் கோலம்.
   மாற்றுமா வேதனையை இனிவரும் எதிர்காலம்?
   ஆற்ற ஆளின்றி அல்லலில் இன்று.
   நம்பிக்கை கரம் கொண்டு  நாங்கள்
   கரை சேருவது   என்று?