பொய்த்துப்போன பருவமழையால்
விவசாயி வடித்த கண்ணீர்
கடல்.
யாரிடம் காதல் தோல்வி
ஓயாமல் அழுகிறது
மழை.
தடாகத்தின் அழுக்கை தின்று
சுத்தப்படுத்தும் மீன்,பொதுநலவாதி.
தன்னை மட்டும் உயர்த்திக்கொள்ளும்
அரசியல்வாதி, சுயநலவாதி...............
மழைமீது கொண்ட காதலால்
பூமி பிரசவித்தது,
புல்வெளி குழந்தை.
கள்வன் போல் வைகறையில் வந்து,
கரைதாண்டி ஊருக்குள் புகுந்து,
உயிர்களை குடித்த கடல் பருந்து.
..... சுனாமி.
மழைமீது கொண்ட காதலால்
ReplyDeleteபூமி பிரசவித்தது,
புல்வெளி குழந்தை.
சொக்கிப் போக வைத்த கவிதைப் பூ!
ஒவ்வொரு ஹைகூவிலும் சில வோல்டஜ்கள் மின்சாரம் பாய்கிறது !
Delete